அல்-லாத்
From Wikipedia, the free encyclopedia
அல்-லாத் (Al-Lat) (அரபு மொழி: اللات, romanized: Al-Lāt, பலுக்கல் [al(i)ˈlaːt(u)]), இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் பண்டைய அண்மை கிழக்கின் அரேபிய தீபகற்பத்தின் பகுதிகளில், குறிப்பாக, ஹெஜாஸ், வடக்கு அரேபியா மற்றும் சிரியாவின் பல்மைரா பகுதிகளின் செமிடிக் மொழிகள் பேசிய பழங்குடி மக்கள் வழிபட்ட பெண் தெய்வங்களில் ஒருவராவர். [2] போர், அமைதி மற்றும் செழிப்பத்திற்கான தேவதையான அல்-லாத் தெய்வத்தின் மூத்த சகோதரியும், பெண் தேவதையும், விதியின் கடவுளுமான மனாத் ஆவார். இவரது மற்றொரு சகோதரி அல்-உஸ்ஸா வலிமைக்கான பெண் தெய்வம் ஆவார்.[3] இம்மூன்று பெண் தெய்வங்கள் முப்பெரும் தேவியர் எனப்பட்டனர்.
- ஒட்டகத்தின் மீது அல்-லாத் பெண் தெய்வம்