ஈபெல் கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 63 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.
விரைவான உண்மைகள் ஈபெல் கோபுரம் Eiffel Tower, பதிவு உயரம் ...
ஈபெல் கோபுரம் Eiffel Tower | |
---|---|
La Tour Eiffel | |
சாம்ப் டி மார்சு (Champ de Mars) என்ற இடத்திலிருந்து ஈபெல் கோபுரத்தின் தோற்றம் | |
பதிவு உயரம் | |
Tallest in the world from 1889 to 1930[I] | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அவதானிப்புக் கோபுரம், வானொலி ஒலிபரப்புக் கோபுரம் |
இடம் | பாரிசு, பிரான்சு |
கட்டுமான ஆரம்பம் | 1887 |
நிறைவுற்றது | 1889 |
திறப்பு | 31 மார்ச் 1889 |
உரிமையாளர் | பாரிசு நகரம், பிரான்சு |
மேலாண்மை | Société d'Exploitation de la Tour Eiffel (SETE) |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 324.00 m (1,063 அடி) |
கூரை | 300.65 m (986 அடி) |
மேல் தளம் | 273.00 m (896 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 3 |
உயர்த்திகள் | 9 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஸ்டீவன் சவஸ்ட்ரி |
அமைப்புப் பொறியாளர் | மொரிசு கொச்லின், ஏமிலி நோகியே |
முதன்மை ஒப்பந்தகாரர் | அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் |
மூடு