கஃபா
From Wikipedia, the free encyclopedia
கஉபா (Kaaba, அரபு மொழி: الكعبة al-Kaʿbah "கனசதுரம்"), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.[1] ஏழுமுறை இடஞ்சுழியாகச்) சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் கஉபா, அமைவிடம் ...
கஉபா | |
---|---|
ஆள்கூறுகள்: 21.4225°N 39.826181°E / 21.4225; 39.826181 | |
அமைவிடம் | மக்கா, அல்-ஹிஜாஸ், சவூதி அரேபியா |
பிரிவு/பாரம்பரியம் | இசுலாம் |
கட்டிடக்கலைத் தகவல்கள் | |
நீளம் | 10.5m |
அகலம் | 10.5 m |
உயரம் | 15 m |
மூடு