கண்டம்
From Wikipedia, the free encyclopedia
கண்டம் (ஒலிப்புⓘ) (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தப்படுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகும்.[1]
நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும்.