அமராத்தியப் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
அமராத்தியப் பண்பாடு அல்லது நக்காடா I (Amratian culture, also called Naqada I), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தொல்பொருள் பண்பாட்டுக் காலம் ஆகும். நக்காடா பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்த இப்பண்பாடு, பண்டைய எகிப்தின் தெற்கு எகிப்தில் ஏறத்தாழ கிமு 4,000 முதல் கிமு 3,600 முடிய விளங்கியது.[2]இப்பண்பாட்டை தெற்கு எகிப்தில் பதாரி அருகே உள்ள அம்ரா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் அமராத்தியப் பண்பாடு / நக்காடா I, காலம் ...
அமராத்தியப் பண்பாடு / நக்காடா I | |
---|---|
[[File:|264px|alt=]] | |
காலம் | ஏறத்தாழ் கிமு 4000 — கிமு 3600 [1] |
முக்கிய களங்கள் | அம்ரா, பதாரி அருகில், தெற்கு எகிப்து |
முந்தியது | தஸ்சியப் பண்பாடு, பதாரியப் பண்பாடு, மெரிம்தி பண்பாடு |
பிந்தியது | கெர்செக் பண்பாடு (நக்காடா II) |
மூடு
இப்பண்பாட்டுக் காலத்திற்கு முன்னர் தெற்கு எகிப்தில் தஸ்சியப் பண்பாடு, பதாரியப் பண்பாடு மற்றும் மெரிம்தி பண்பாடுகள் விளங்கியது. இதற்குப் பின் கெர்செக் பண்பாடு எனும் நக்காடா II விளங்கியது.