இலாய் தெக்
மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
இலாய் தெக் (மலாய்: Lai Teck; ஆங்கிலம்: Lai Teck வியட்நாமிய மொழி: Phạm Văn Đắc); என்பவர் மலாயா பொதுவுடைமை கட்சி (Communist Party of Malaya); மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் (Malayan People's Anti-Japanese Army) ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பதவி வகித்தவர். சீன-வியட்நாமிய (Sino-Vietnamese) கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தவர்.[6][7]
விரைவான உண்மைகள் இலாய் தெக்Lai Teck, பொதுச்செயலாளர், மலாயா பொதுவுடைமை கட்சி ...
இலாய் தெக் Lai Teck | |
---|---|
பொதுச்செயலாளர், மலாயா பொதுவுடைமை கட்சி | |
பதவியில் ஏப்ரல் 1939 – 6 மார்ச் 1947 | |
பின்னவர் | சின் பெங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1901 (1901)[3] நிகே தின் மாநிலம், அன்னாம்[4] |
இறப்பு | 1947 (அகவை 45–46) பாங்காக், தாய்லாந்து |
காரணம் of death | மூச்சுத் திணறல் |
இளைப்பாறுமிடம் | சாவோ பிரயா ஆறு |
தேசியம் | வியட்நாமியர் |
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் |
வேலை | அரசியல்வாதி, உளவாளி |
மற்ற பெயர்கள் | லாய் டெக், லோய் தக், லீ சூங்,[3] Wong Kim Geok,[5] சாங் ஆங், திரு. ரைட்[6] |
மூடு
அவர் மலாயாவுக்கு வருவதற்கு முன்பு, அவருடைய பெயர் துருவோங் புவோக் தாட் (Truong Phuoc Dat) என இருந்ததாக நம்பப்படுகிறது. அதன் பின்னர் 1934-இல் இருந்து இவர், இலாய் தெக் எனும் பெயரில் அறியப்படுகிறார்.[8]