சின் பெங்
From Wikipedia, the free encyclopedia
சின் பெங், (Chin Peng அல்லது Ong Boon Hua; சீனம்: 陈平; 1924 - 16 செப்டம்பர் 2013) என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி; மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
விரைவான உண்மைகள் சின் பெங் Chin Peng, பொதுச்செயலாளர் மலாயா கம்யூனிஸ்டு கட்சி ...
சின் பெங் Chin Peng | |
---|---|
பொதுச்செயலாளர் மலாயா கம்யூனிஸ்டு கட்சி | |
பதவியில் 6 மார்ச் 1947 – 2 டிசம்பர் 1989 | |
முன்னையவர் | லாய் தெக் |
பின்னவர் | இல்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஓங் பூன் ஹுவா Ong Boon Hua (1924-10-21)21 அக்டோபர் 1924 சித்தியவான், பேராக், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா |
இறப்பு | 16 செப்டம்பர் 2013(2013-09-16) (அகவை 88) பாங்காக், தாய்லாந்து |
தேசியம் | மலேசியர் |
அரசியல் கட்சி | மலாயா கம்யூனிஸ்டு கட்சி (1940–1989) |
துணைவர்(கள்) | லீ கூன் வா (தி. 1942; இற. 2008) |
பிள்ளைகள் | ஓங் பூ கோக் (மகன்) 1 மகள் |
பெற்றோர்s |
|
வேலை | அரசியல்வாதி, இயக்கத் தலைவர் |
கையெழுத்து | |
மூடு
இவர் பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். இவருடைய முழுப்பெயர் ஓங் பூன் ஹுவா. (சீனம்:王文華). மலாயாவில் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராகவும், பிரித்தானியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர்.[1]
இவருடைய சேவைகளைப் பாராட்டி இவருக்கு பிரித்தானிய அரசாங்கம், பிரித்தானிய உயர் விருதான (Order of the British Empire) எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்தது. இருப்பினும், அவர் பின்னாட்களில் பிரித்தானியர்களுக்கு எதிராகவே மலாயா நாட்டைக் கைப்பற்ற முனைந்தார். பின்னர், இவர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி அதன் தலைவர் ஆனார்.[2]