குபாங் பாசு மாவட்டம்
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
குபாங் பாசு மாவட்டம் (ஆங்கிலம்: Kubang Pasu District; மலாய்: Daerah Kubang Pasu; சீனம்: 古邦巴素县; ஜாவி: كوبڠ ڤاسو) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.
விரைவான உண்மைகள் குபாங் பாசு மாவட்டம், நாடு ...
குபாங் பாசு மாவட்டம் | |
---|---|
Kubang Pasu District | |
மலேசியா | |
கெடா மாநிலத்தில் குபாங் பாசு மாவட்டம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°20′N 100°20′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாநகரம் | ஜித்ரா |
நகராட்சி | குபாங் பாசு நகராட்சி மன்றம் (Kubang Pasu Municipal Council) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | முகமட் அரோப் டாருஸ் (Muhamad Arof Darus) |
பரப்பளவு | |
• மொத்தம் | 945.96 km2 (365.24 sq mi) |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 2,15,491 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-04 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
மூடு
இந்த மாவட்டத்தில் தான் மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) நகரமான புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) உள்ளது. அத்துடன் சாங்லூன் (Changlun) கல்வி வளாகம்; மற்றும் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான ஜித்ரா (Jitra) நகரமும் இங்குதான் உள்ளன.
குபாங் பாசு மாவட்டம், கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 130 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது.