மலேசியா-தாய்லாந்து எல்லை
மலேசியா தாய்லாந்து நாடுகளைப் பிரிக்கும் அனைத்துலக எல்லை / From Wikipedia, the free encyclopedia
மலேசியா-தாய்லாந்து எல்லை (ஆங்கிலம்: Malaysia–Thailand Border; மலாய்: Sempadan Malaysia-Thailand; தாய் மொழி: ชายแดนมาเลเซีย–ไทย); என்பது மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளைப் பிரிக்கும் அனைத்துலக எல்லையாகும்.[1]
விரைவான உண்மைகள் மலேசியா-தாய்லாந்து எல்லை Malaysia–Thailand Border, சிறப்பியல்புகள் ...
மலேசியா-தாய்லாந்து எல்லை Malaysia–Thailand Border | |
---|---|
பாடாங் பெசார் சோதனைச் சாவடிக்கு அருகில் தாய்லாந்து மலேசியா எல்லைச் சுவர். | |
சிறப்பியல்புகள் | |
Entities | தாய்லாந்து மலேசியா |
நீளம் | 595 கி.மீ. |
வரலாறு | |
அமைக்கப்பட்டது | 10 மார்ச் 1909 |
தற்போதைய வடிவமைப்பு | 1909 |
உடன்பாடுகள் | • பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909) |
மூடு
தீபகற்ப மலேசியா; மலாக்கா நீரிணை; தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand); தென் சீனக் கடல் ஆகியவற்றின் குறுக்கே 595 கி.மீ. (370 மைல்) வரை அமைந்துள்ள ஒரு நில எல்லை. கோலோக் ஆறு (Golok River) எனும் அனைத்துலக எல்லை ஆறு, இந்த இரு நாடுகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆறு. 95 கி.மீ. நீளத்தைக் கொண்டது.[2]