குல்ஃபி
இந்திய உறைய வைக்கப்பட்ட இனிப்பு / From Wikipedia, the free encyclopedia
குல்ஃபி (kulfi) குளிர்களி இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு பால் உணவு. இது பாரம்பரிய இந்தியக் குளிர்களி என்று கருதப்படுகிறது.[1][2] இனிப்பும் சுவையும் சேர்க்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் ஒரு பங்கு பால் அரைப்பங்காகும் வரை தொடர்ந்து காய்ச்சிக் குளிர்வித்துக் குல்ஃபி தயாரிக்கப்படுகிறது. மலாய் குல்ஃபி, மாங்காய் குல்ஃபி, ரோஸ் குல்ஃபி, குங்குமப்பூ குல்ஃபி என்று பல நிறங்களிலும் சுவைகளிலும் குல்ஃபி கிடைக்கிறது.
விரைவான உண்மைகள் வகை, பரிமாறப்படும் வெப்பநிலை ...
மட்கா குல்ஃபி | |
வகை | குளிர்களி |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தமிழ்நாடு, பாக்கித்தான், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பிற வட இந்திய பகுதிகள் |
முக்கிய சேர்பொருட்கள் | பால் |
மூடு