பாக்கித்தான்
தெற்காசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
பாக்கித்தான் (Pakistan, பாகிஸ்தான், உருது: پاکستان), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (உருது: اسلامی جمہوریۂ پاکستان), ஆசியக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து. கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள இலாகூர் மற்றொரு முக்கிய நகரம்.
பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு Islamic Republic of Pakistan | |
---|---|
குறிக்கோள்: "நம்பிக்கை, ஒற்றுமை, ஒழுக்கம்"[1] | |
நாட்டுப்பண்: காமீ தரானா قَومی ترانہ "தேசியப் பண்" | |
தலைநகரம் | இசுலாமாபாது 33°41′30″N 73°03′00″E |
பெரிய நகர் | கராச்சி 24°51′36″N 67°00′36″E |
ஆட்சி மொழி(கள்) |
|
தேசிய மொழிகள் | உருது[2] |
பிராந்திய மொழிகள் | மாகாண மொழிகள் |
ஏனைய மொழிகள் | 77 இற்கும் அதிகம்[3] |
இனக் குழுகள் (2017[lower-alpha 1]) | |
சமயம் | |
மக்கள் | பாக்கித்தானி |
அரசாங்கம் | கூட்டாட்சி இசுலாமிய நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | ஆரிப் அல்வி |
• பிரதமர் | செபாஷ் செரீப் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | தேசியப் பேரவை |
விடுதலை பிரித்தானியாவிடம் இருந்து | |
23 மார்ச் 1940 | |
• விடுதலை | 14 ஆகத்து 1947 |
• குடியரசு | 23 மார்ச் 1956 |
• கிழக்குப் பகுதி வெளியேறல் | 26 மார்ச் 1971 |
14 ஆகத்து 1973 | |
பரப்பு | |
• மொத்தம் | 881,913 km2 (340,509 sq mi)[lower-alpha 2][8] (33-ஆவது) |
• நீர் (%) | 2.86 |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 242,923,845[9] (5-ஆவது) |
• அடர்த்தி | 244.4/km2 (633.0/sq mi) (56-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $1.512 திரிலியன்[10] (23rd) |
• தலைவிகிதம் | $6,662[10] (168-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $376.493 billion[11] (42-ஆவது) |
• தலைவிகிதம் | $1,658[10] (177-ஆவது) |
ஜினி (2018) | 31.6[12] மத்திமம் |
மமேசு (2022) | 0.544[13] தாழ் · 161-ஆவது |
நாணயம் | உரூபாய் (₨) (PKR) |
நேர வலயம் | ஒ.அ.நே+05:00 (நேரம்) |
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை | |
திகதி அமைப்பு |
|
வாகனம் செலுத்தல் | இடது[14] |
அழைப்புக்குறி | +92 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | PK |
இணையக் குறி |
|
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095 கிமீ2 (307,374 ச மை) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் 1,046-கிலோமீட்டர் (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது.
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[15][16] விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[17] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[18]