தேவன் நாயர்
From Wikipedia, the free encyclopedia
தேவன் நாயர் என்று அழைக்கப்படும் தேவன் நாயர் செங்கர வெட்டில் (ஆங்கிலம்: Devan Nair அல்லது Chengara Veetil Devan Nair; மலாய்: Devan Nair; மலையாளம்: ദേവൻ നായർ ചെങ്ങറ വീട്ടിൽ; சீனம்: 琴加拉·维蒂尔·德万·奈尔); என்பவர் மூன்றாவது சிங்கப்பூர் அதிபர்; மற்றும் மலேசிய சிங்கப்பூர் அரசியல்வாதியும் ஆவார்.
விரைவான உண்மைகள் மேதகுதேவன் நாயர்Devan Nair, சிங்கப்பூரின் 3-ஆவது அதிபர் ...
மேதகு தேவன் நாயர் Devan Nair | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சிங்கப்பூரின் 3-ஆவது அதிபர் | |||||||||||||||||||||||||||||
பதவியில் 23 அக்டோபர் 1981 – 28 மார்ச் 1985 | |||||||||||||||||||||||||||||
பிரதமர் | லீ குவான் யூ | ||||||||||||||||||||||||||||
முன்னையவர் | பெஞ்சமின் சியர்ஸ் | ||||||||||||||||||||||||||||
பின்னவர் | வீ கிம் வீ | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூடு
இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், 1981-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்தவர்.[2]
சிங்கப்பூரின் அதிபராக இருந்த பெஞ்சமின் சியர்ஸ் (Benjamin Sheares) மரணத்திற்குப் பிறகு, தேவன் நாயர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 அக்டோபர் 23-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்றார். இருப்பினும் 1985 மார்ச் 28-ஆம் தேதி, தெளிவற்ற சூழ்நிலையின் காரணமாக இவர் தன் அதிபர் பதவியைத் துறப்பு செய்தார்.[3]