பபேசியே
ஒரு தாவர குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
பபேசியே என்பது (தாவர வகைப்பாட்டியல்: Fabaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள, மூன்றாவது பெரிய குடும்பம் ஆகும்.[5] இக்குடும்பம், மிகவும் பொருளாதார முக்கியத்துவம் உடையது[6]. இக்குடும்பத்தில் 732[7] பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 19,400 இனங்களும் உள்ளன. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை அவரைக் குடும்பம் அல்லது பருப்பினக் குடும்பம் எனலாம்.
விரைவான உண்மைகள் பபேசியே (Fabaceae) புதைப்படிவ காலம்:Paleocene–Recent, உயிரியல் வகைப்பாடு ...
பபேசியே (Fabaceae) புதைப்படிவ காலம்:Paleocene–Recent[1] | |
---|---|
Swainsona galegifolia | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே (Fabaceae) John Lindley (ஆய்வாளர்) |
மாதிரிப் பேரினம் | |
Faba ( Vicia என்பதில் இணைக்கப்பட்டுள்ளது) Mill. | |
துணைக்குடும்பங்கள்[2] | |
Caesalpinioideae[3] (80பே – 3200சி) | |
பபேசியே பரவல் நிலைஉயிரின நிலத்தில் நான்கிலும் காணப்படுகின்றன: மழைக்காடுகள், வெப்ப வலயம்,புல்வெளி, சதைப்பற்றுத் தாவரம்.[4] |
மூடு