உருசியப் பேரரசு
1721 முதல் 1917 வரை இருந்த முன்னாள் நாடு / From Wikipedia, the free encyclopedia
உருசியப் பேரரசு (Russian Empire, Россійская Имперія, இன்றைய உருசியம்: Российская Империя) என்பது 1721 முதல் 1917 உருசியப் புரட்சி முடியும் வரை இருந்த நாடு. இது சாராட்சியை அடுத்து உருவாக்கப்பட்டது. உருசியப் பேரரசு பின்னர் சிறிது காலம் உருசியக் குடியரசாகி, பின்னர் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. உலக வரலாற்றில் நிலப்பரப்பின் படி பிரித்தானியப் பேரரசு, மங்கோலியப் பேரரசு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பேரரசாக இருந்தது. 1866 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பா முதல் ஆசியா ஊடாக வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது.
உருசியப் பேரரசு Russian Empire Россійская Имперія | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1721–1917 | |||||||||||||||||||
குறிக்கோள்: ஸ் நாமி போக்! Съ нами Богъ! "கடவுள் எம்மிடம்!" | |||||||||||||||||||
நாட்டுப்பண்: எதுவுமில்லை பேரரசின் பண் போஷெ, த்சார்யா ஹ்ரானி! Божѣ, Царя храни! "மன்னரைக் கடவுள் காப்பாற்றுவார்!" | |||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||
தலைநகரம் | சென் பீட்டர்ஸ்பேர்க் (1721–1728) மாஸ்கோ (1728–1730) சென் பீட்டர்ஸ்பேர்க்[b] (1730–1917) | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அதிகாரபூர்வ மொழி: உருசியம் பிராந்திய மொழிகள்: பின்னிய மொழி, சுவீடிய மொழி, போலிய மொழி, இடாய்ச்சு மொழி, உருமானிய மொழி இரண்டாம் மொழி: பிரெஞ்சு மொழி | ||||||||||||||||||
சமயம் | அதிகாரபூர்ம சமயம்: உருசிய மரபுவழி திருச்சபை சிறுபான்மை சமயங்கள்: கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை, யூதம், இசுலாம், பௌத்தம், அஞ்ஞானி | ||||||||||||||||||
அரசாங்கம் | முழுமையான முடியரசு (அரசருக்கு முழுமையான உரிமை) | ||||||||||||||||||
உருசியப் பேரரசர் | |||||||||||||||||||
• 1721–1725 | பீட்டர் I (முதலாம்) | ||||||||||||||||||
• 1894–1917 | நிக்கலாசு II (கடைசி) | ||||||||||||||||||
அமைச்சரவைத் தலைவர் | |||||||||||||||||||
• 1905–1906 | செர்கே விட்டே (முதலாவது) | ||||||||||||||||||
• 1917 | நிக்கொலாய் கோலித்சின் (கடைசி) | ||||||||||||||||||
சட்டமன்றம் | ஆளும் செனட் | ||||||||||||||||||
• மேலவை | அரசுப் பேரவை | ||||||||||||||||||
• கீழவை | அரசு தூமா | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• முதலாம் பீட்டர் முடியேற்றம் | 7 மே [யூ.நா. 27 ஏப்ரல்] 1682[c] | ||||||||||||||||||
• பேரரசாக அறிவிப்பு | 22 அக்டோபர் [யூ.நா. 11 அக்டோபர்] 1721 1721 | ||||||||||||||||||
• திசம்பர் கிளர்ச்சி | 26 திசம்பர் [யூ.நா. 14 திசம்பர்] 1825 | ||||||||||||||||||
• நிலக்கிழாரியம் இல்லாதொழிப்பு | 3 மார்ச்சு [யூ.நா. 19 பெப்ரவரி] 1861 | ||||||||||||||||||
சனவரி-திசம்பர் 1905 | |||||||||||||||||||
• அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படல் | 23 ஏப்ரல் [யூ.நா. 6 மே] 1906 | ||||||||||||||||||
• பெப்ரவரி புரட்சி | 15 மார்ச் [யூ.நா. 2 மார்ச்] 1917 1917 | ||||||||||||||||||
7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 | |||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||
1866 | 23,700,000 km2 (9,200,000 sq mi) | ||||||||||||||||||
1916 | 21,799,825 km2 (8,416,959 sq mi) | ||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||
• 1897 | 125640021 | ||||||||||||||||||
நாணயம் | ரூபிள் | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | |||||||||||||||||||
a. ^ 1866 இல் அலாஸ்கா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது, ஆனால் பட்டும், கார்ஸ், பாமிர் மலைகள், திரான்ஸ்காஸ்பியா ஆகியன வாங்கப்பட்டன. b. ^ 1914 இல் பெத்ரோகிராத் எனப் பெயர் மாற்றம் பெற்றது. c. ^ பெப்ரவரி புரட்சி முடியும் வரை யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்தியது. |
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருசியக் குடியரசு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல், தெற்கே கருங்கடல் வரை, மேற்கே பால்ட்டிக் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை, கிழக்கே வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது. 1897 ஆம் ஆண்டில் 125.6 மில்லியன் மக்கள் இப்பேரரசில் வசித்தனர். இது சிங் சீனா, மற்றும் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்தது. அனைத்து பேரரசுகளைப் போலவே, பொருளாதாரம், இனம், சமயம் பேன்றவற்றில் பலவகையினைக்கொண்ட நாடு இதுவாகும். உருசியப் புரட்சி, 1905 வரை இது உருசிய பேரரசரால் ஆளப்பட்ட ஒரு முடியாட்சியாகவே இருந்தது. இதன் பின் இது அரசியல்சட்ட முடியாட்சியானது/ எனினும், இதன் அரசருக்கு அரசியலில் பலம் குறையவில்லை. முதல் உலகப் போரில் இன்நாட்டின் பங்கேற்பின் விளைவாக நிகழ்ந்த 1917இன் பெப்ரவரிப் புரட்சி, இப்பேரரசின் முடிவாக அமைந்தது.