எப்-35
ஐந்தாம் தலைமுறை மறைவான தாக்குதல் வானூர்திகளின் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
எப்-35 அல்லது லொக்கீட் மார்டீன் எப்-35 மின்னல் II (Lockheed Martin F-35 Lightning II) என்பது ஒரு தனி இருக்கை, தனிப் பொறி, எல்லா காலநிலையிலும் மறைவான, பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இந்த ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் தரைத்தாக்குதல் மற்றம் வான் போர் செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இது மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. எப்-35ஏ மரபுமுறை புறப்படுத்தல் மற்றும் தரையிறக்கத்திற்காகவும், எப்-35பி குறுகிய புறப்படுத்தல் மற்றும் செங்குத்து தரையிறக்கத்திற்காகவும், எப்-35சி விமானந்தாங்கியின் கவண் எறிமுறை புறப்படுத்தல் மற்றும் தடுப்புப் பிடிப்பு திரும்பப்பெறல் முறைக்காகவும் வடிவமைக்கப்பட்டன. 31 சூலை 2015 அன்று, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு எப்-35பி சோதனையின் பின்னர் முதலாவது படைப்பிரிவு தயாராக உள்ளது என அறிவித்தது.[6][7] 2 ஆகத்து 2016 அன்று, ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-35ஏ விமாங்களைக் கொண்ட முதலாவது படைப்பிரிவு சண்டைக்குத் தயார் என அறிவித்தது.[8] இது லொக்கீட் மார்ட்டின் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களான நார்த்ரோப் குரூமன், பிராட் & விட்னி மற்றும் பிஏஈ சிஸ்டம்ஸ் உள்ளிடவர்களால் கட்டப்பட்டுகிறது.
எப்-35 எப்-35 மின்னல் II | |
---|---|
எப்-35 | |
வகை | மறைந்து தாக்கும் முறை பல்வகைத் தாக்குதல் வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | லொக்கீட் மார்ட்டின் |
வடிவமைப்பாளர் | ஐக்கிய அமெரிக்கா |
முதல் பயணம் | 15 டிசம்பர் 2006 |
அறிமுகம் | 2016க்குப் பின்[1] |
தற்போதைய நிலை | ஆரம்ப உற்பத்தி, அமெரிக்காவில் பயிற்சிக்காக மட்டும்[2] |
உற்பத்தி | 2006–தற்போதும் |
தயாரிப்பு எண்ணிக்கை | 63[3] |
அலகு செலவு | எப்-35ஏ: ஐ.அ$197 மில்லியன் (2012)[4] எப்-35பி: ஐ.அ$237.7மில்லியன் (2012)[5] எப்-35சி: ஐ.அ$236.8மில்லியன் (2012)[5] |
முன்னோடி | லொக்கீட் மார்ட்டின் எக்ஸ்-35 |