கன்னடம்
இந்திய தேசிய மொழிகளில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும்.[6] பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.[7] இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.[8]
விரைவான உண்மைகள் கன்னடம், உச்சரிப்பு ...
கன்னடம் | |
---|---|
ಕನ್ನಡ | |
உச்சரிப்பு | [ˈkʌnnəɖɑː] |
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கருநாடகம் with border communities in neighbouring states |
இனம் | கன்னடர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 38 மில்லியன் (2007)ne2007 11 மில்லியன் இரண்டாவது மொழியாக (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)[1] |
ஆரம்ப வடிவம் | பழங்கன்னடம்
|
கன்னட எழுத்துமுறை (பிராமி) கன்னட பிரெய்லி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இந்தியா |
Regulated by | Various academies and the government of கருநாடகம்[3] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kn |
ISO 639-2 | kan |
ISO 639-3 | kan |
மொழிக் குறிப்பு | nucl1305[4] |
Linguasphere | 49-EBA-a |
Distribution of Kannada native speakers, majority regions in orange and minority regions in yellow.[5] |
மூடு
இம்மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து இருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும்.