காளிதாஸ் (1931 திரைப்படம்)
எச். எம். ரெட்டி இயக்கத்தில் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்[1].
விரைவான உண்மைகள் காளிதாஸ், இயக்கம் ...
காளிதாஸ் | |
---|---|
காளிதாஸ் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு | |
இயக்கம் | எச். எம். ரெட்டி |
தயாரிப்பு | ஆர்தேசிர் இரானி |
நடிப்பு | பி. ஜி. வெங்கடேசன் டி. பி. ராஜலட்சுமி எல். வி. பிரசாத் தேவாரம் ராஜாம்பாள் ஜே. சுசீலா சுசீலா தேவி எம். எஸ். சந்தானலட்சுமி |
வெளியீடு | அக்டோபர் 31, 1931 |
மூடு
இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.[2]
இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது[3].