கிழங்கு
From Wikipedia, the free encyclopedia
கிழங்குகள் என்பவை ஒரு தாவரம் அதற்குத் தேவையான சத்துக்களையும், உணவுகளையும் சேமித்து வைத்துக் கொள்ளும் உருமாற்றமடைந்த பாகங்கள். கடுங்குளிர் மாதங்களிலோ, கடும் வெயில் காலங்களிலோ போதுமான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல் போகும் போது, தமக்குத் தேவையான உணவை கிழங்குகளிலிருந்தே அத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும். அதே போல, அடுத்த பருவ காலத்திற்கு ஏதுவாய் முளைக்கவும், கலவியற்ற இனப்பெருக்கத்தில் ஈடுபடவும் கிழங்குகள் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் தருகின்றன.[1] கிழங்குகள் ஒரு தாவரத்தின் தண்டுகளிலிருந்து முளைப்பதாக சிலரும்;[1] மாறாக அதன் வேர்களிலிருந்து முளைப்பதாக சிலரும் கருதுவார்கள்.[2]