பாரிசு
பிரான்சின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
பாரிசு (Paris, பாரிஸ், பிரெஞ்சு உச்சரிப்பு: [paʁi] (கேட்கⓘ), பாரீ) எனப்படுவது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். இதன் மக்கள்தொகை 2,102,650 (1 சனவரி 2023) ஆகும்.[2] இதன் பரப்பளவு ஏறத்தாழ 105 சதுர கிமீ ஆகும்.[5] பாரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஐந்தாவது மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும், உலகின் 30-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும் (2022).[6] 17-ஆம் நூற்றாண்டிலிருந்து, பாரிசு நிதி, பண்ணுறவாண்மை, வணிகம், பண்பாடு, அலங்காரம், உணவு மற்றும் பல துறைகளில் உலகின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கலை மற்றும் அறிவியலில் இதன் முக்கிய பங்கிற்காகவும், இதன் ஆரம்பகால மற்றும் விரிவான தெரு விளக்கு அமைப்பிற்காகவும், 19 ஆம் நூற்றாண்டில், இது ஒளி நகரம் என்று அறியப்பட்டது.[7]
விரைவான உண்மைகள் பாரிசு, நாடு ...
பாரிசு | |
---|---|
தலைநகரம், நகரம், திணைக்கள்ம் | |
குறிக்கோளுரை: Fluctuat nec mergitur "அலைகளால் தூக்கி எறியப்பட்டாலும் மூழ்கவில்லை" | |
ஆள்கூறுகள்: 48°51′24″N 2°21′8″E | |
நாடு | பிரான்சு |
Region | இல் ட பிரான்சு |
திணைக்களம் | பாரிஸ் |
Intercommunality | பெரும் பாரிசு |
ஆட்சிப்பிரிவுகள் | 20 பெருநகரங்கள் |
அரசு | |
• நகரமுதல்வர் (2020–2026) | ஆன் இடால்கோ[1] (சோசலிசக் கட்சி) |
Area 1 | 105.4 km2 (40.7 sq mi) |
• நகர்ப்புறம் (2020) | 2,853.5 km2 (1,101.7 sq mi) |
• மாநகரம் (2020) | 18,940.7 km2 (7,313.0 sq mi) |
மக்கள்தொகை (2023)[2] | 21,02,650 |
• அடர்த்தி | 20,000/km2 (52,000/sq mi) |
• நகர்ப்புறம் (2019[3]) | 1,08,58,852 |
• நகர்ப்புற அடர்த்தி | 3,800/km2 (9,900/sq mi) |
• பெருநகர் | 1,30,24,518 |
• பெருநகர் அடர்த்தி | 690/km2 (1,800/sq mi) |
இனம் | பாரிசியான் (ஆங்.) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 75056 /75001-75020, 75116 |
ஏற்றம் | 28–131 m (92–430 அடி) (avg. 78 m or 256 அடி) |
இணையதளம் | www |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
மூடு