ஆர். ஜி. பாலன்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஆர்.ஜி. பாலன் எனும் இராசகோபால் பாலன் ஆங்கிலம்: R. G. Balan @ Raja Gopal Balan; (மலாய்: R. G. Balan; சீனம்: R.G.巴兰); மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்; மலாயா தேசிய விடுதலை இராணுவம்; ஆகிய சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தைச் சேர்ந்தவர். இவர் மலாயா தேசிய விடுதலை இராணுவத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராகப் பொறுப்பு வகித்தவர்.[2]
ஆர்.ஜி.பாலன் R. G. Balan | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராச கோபால் பாலன் 02.10.1923 நோவா சுகோசியா தோட்டம், தெலுக் இந்தான், பேராக், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா |
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
துணைவர்(கள்) | சிவபாக்கியம் திருமணம்: 24 சூன் 1961; செட்டியார் மண்டபம்; கோலாலம்பூர்[1] |
கல்வி | ஆங்கிலோ சீனப்பள்ளி, தெலுக் இந்தான்; நாகரத்தினம் நினைவு ஆங்கிலப் பள்ளி |
அறியப்படுவது | மலாயா தேசிய விடுதலை இராணுவம் முக்கிய நபர் |
Military service | |
பற்றிணைப்பு | மலாயா தேசிய விடுதலை இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1942 - 1961; இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் |
அலகு | ஆசிரியர், ஜெயமணி பொதுவுடைமை பிரசார இதழ் |
போர்கள்/யுத்தங்கள் | மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு; மலாயா அவசரகாலம்; |
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது மலாயா பொதுவுடைமை கட்சியின் பிரசார இதழ்களான ‘ஜெயமணி’ (Jayamani); மலாயா குரல் (Voice of Malaya) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். சப்பானியர் காலத்தில், இவர் பகாங், லங்காப் எனும் இடத்தின் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.[2]
அதன் பின்னர் தாப்பா, கம்பார் பகுதிகளில் மலாயா பொதுவுடைமை கட்சியின் இந்தியர்ப் பிரிவில் பணியாற்றினார்.[3] இவர் அப்துல்லா சிடி மற்றும் சூரியானி அப்துல்லா ஆகியோருடன் நெருங்கிய நண்பராக இருந்தார். இவர்கள் இருவரும் மலாயா பொதுவுடைமை கட்சியின் துணைத் தலைவகளாக இருந்தவர்கள்.