கெபல் எல்-அராக் கத்தி
From Wikipedia, the free encyclopedia
கெபல் எல்-அராக் கத்தி (Gebel el-Arak Knife or Jebel el-Arak Knife), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் (கிமு 3500—3200) ,நக்காடா II காலத்தில் ஜெர்சியப் பண்பாட்டு (கிமு 3450) காலத்திய தொல்பொருள் ஆகும். இக்கத்தியின் கைப்பிடி யானையின் தந்ததாலும், கத்தி விண்கல்லாலும் செய்யப்பட்ட இத்தொல்பொருள், பண்டைய அண்மை கிழக்கின் உரூக் காலத்திய கீழ் மெசொப்பொத்தேமியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள் அதிகம் கொண்டுள்ளது. இக்கத்தி எகிப்தின் நெக்கென் நகரத்தில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
கெபல் எல்-அராக்கின் கத்தி (பின்புறம் & முன்புறம்), லூவர் அருங்காட்சியகம் | |
செய்பொருள் | யானையின் தந்தம் மற்றும் விண்கல் |
---|---|
அளவு | 25.5 சென்டிமீட்டர்கள் (10.0 அங்) |
உருவாக்கம் | வரலாற்றுக்கு முந்தைய எகிப்து#ஜெர்சியப் பண்பாடு#நக்காடா II, கிமு 3450[1] |
கண்டுபிடிப்பு | கெய்ரோவின் தொல்பொருட்கள் விற்கும் வணிகர் எம். நக்மானிடமிருந்து பிப்ரவரி 1914-ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஆரோன் பெனிடைட் விலை கொடுத்து வாங்கினார். |
தற்போதைய இடம் | லூவர் அருங்காட்சியகம், சுல்லி தொகுதி, அறை எண் 20 |
அடையாளம் | E 11517[2] |
கெபல் எல்-அராக் கத்தியின் மொத்த எடை 92.3 கிராம் மட்டுமே. தந்தத்திலான இக்கத்தியின் கைப்பிடியின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மெசொப்பொத்தேமியா மன்னர் இரு சிங்கங்களை கைகளால் பற்றி நிற்பது போன்ற காட்சியும், போர்க்களத்தில் போர் வீரர்கள் போரிடும் காட்சியும் மற்றும் விலங்குகளில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
இக்கத்தியை கெய்ரோவில் தொல்பொருட்கள் விற்கும் வணிகர் எம். நக்மானிடமிருந்து பிப்ரவரி 1914-ஆம் ஆண்டில் எகிப்தியவியல் அறிஞர் ஜார்ஜ் ஆரோன் பெனிடைட் என்பவர், பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசு நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்திற்காக விலை கொடுத்து வாங்கினார். தற்போது இக்கத்தி லூவர் அருங்காட்சியகத்தின், சுல்லி தொகுதியில், அறை எண் 20-இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கத்தி பண்டைய எகிப்தின் கெபல் எல்-அராக் தொல்லியல் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக விற்பனையாளரால் கூறப்பட்டது. ஆனால் இன்று இக்கத்தி எகிப்தின் பண்டைய எகிப்தின் நெக்கென் நகரத்திலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.