கீழ் மெசொப்பொத்தேமியா
புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாரசீக வளைகுடாவில் கலக்கும் முன்னர் அமைந்த வடிநிலத்தில / From Wikipedia, the free encyclopedia
கீழ் மெசொப்பொத்தேமியா (Lower Mesopotamia)[1][2] பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த மெசொப்பொத்தேமியாவின் கீழ் பகுதியாகும். கீழ் மெசொப்பொத்தேமிய தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாரசீக வளைகுடாவில் கலக்கும் முன்னர் அமைந்த வடிநிலத்தில் அமைந்த நிலப்பரப்புகள் ஆகும்.
மத்திய காலத்தில் வண்டல் மண் நிறைந்த கீழ் மெசொப்பொத்தேமியாவை அரபு மொழியில் சாவத் (Sawad) என்றும் பாரசீக மொழியில் சிபால் (Jibal) என்றும் அழைப்பர்.[3] கீழ் மெசொப்பொத்தேமியா பண்டைய சுமேரிய - பாபிலோனிய நாகரீகங்களின் பிறப்பிடமாகும்.[4] இதன் மேற்பகுதியில் (வடக்கில்) மேல் மெசொப்பொத்தேமியா உள்ளது.