செம்தேத் நசிர் காலம்
கீழ் மெசொப்பொத்தேமியாவில், கிமு 3100 முதல் கிமு 2900 வரை கானப்பட்ட தொல்பொருள் பண்பாடுக் காலம் / From Wikipedia, the free encyclopedia
செம்தேத் நசிர் காலம் ( Jemdet Nasr Period) (கிமு 3100 — கிமு 2900) பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவில், சுமேரிய நகரமான செம்தேத் நசிர் நகரத்தில், (தற்கால தெற்கு ஈராக்கில்) கிமு 3100 முதல் கிமு 2900 வரை காணப்பட்ட ஒரு தொல்பொருள் பண்பாடுக் காலம் ஆகும். செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் பெயரால் இதற்கு செம்தேத் நசிர் காலம் எனப்பெயரிடப்பட்டது. செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் உரூக் காலமும், அதன் பின்னர் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலமும் துவங்கியது.
விரைவான உண்மைகள் செம்தேத் நசிர் காலம் கிமு 3100 — கிமு 2900, புவியியல் பகுதி ...
செம்தேத் நசிர் காலம் கிமு 3100 — கிமு 2900 | |
---|---|
செம்தேத் நசிர் காலப் பண்பாட்டுக் களங்கள் (வெளிர் பழுப்பு நிறத்தில்), உரூக் பண்பாட்டுக் களங்கள் (மஞ்சள் நிறத்தில்) | |
புவியியல் பகுதி | மெசொப்பொத்தேமியா |
காலப்பகுதி | வெண்கலக் காலம் |
காலம் | கிமு 3100 முதல் — கிமு 2900 வரை |
வகை களம் | செம்தேத் நசிர் தொல்லியல் மேடு |
முக்கிய களங்கள் | அபு சலாபிக், சுருப்பக், பாரா, கபாஜா, நிப்பூர், உக்கயர், ஊர் மற்றும் உரூக் தொல்லியல் மேடுகள் |
முந்தியது | உரூக் காலம் |
பிந்தியது | மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலம் |
மூடு