மகாதீர் பின் முகமது
மலேசியப் பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
மகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad, சீனம்: 马哈迪·莫哈末; பிறப்பு: 10 சூலை 1925)[2] மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3] இவர் லங்காவி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.[4][5] 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.[6][7]24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
மகாதீர் முகமது Mahathir Mohamad 马哈迪·莫哈末 | |
---|---|
2019 இல் மகாதீர் | |
4-வது, 7-வது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 10 மே 2018 – 24 பெப்ரவரி 2020 இடைக்கால: 24 பெப்ரவரி 2020 – 1 மார்ச் 2020[1] | |
ஆட்சியாளர்கள் | கெலந்தானின் ஐந்தாம் முகம்மது சுல்தான் அப்துல்லா |
Deputy | வான் அசிசா வான் இஸ்மாயில் |
முன்னையவர் | நஜீப் ரசாக் |
பின்னவர் | முகிதீன் யாசின் |
பதவியில் 16 சூலை 1981 – 31 அக்டோபர் 2003 | |
ஆட்சியாளர்கள் | அகமது ஷா, இசுக்காந்தர், அசுலான் ஷா, ஜாஃபர், சலாகுதீன், சிராசுதீன் |
Deputy | முசா இத்தாம், காஃபர் பாபா, அன்வர் இப்ராகீம், அப்துல்லா அகுமது பதவீ |
முன்னையவர் | உசேன் ஓன் |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
21-வது பொதுச் செயலர், கூட்டுசேரா இயக்கம் | |
பதவியில் 20 பெப்ரவரி 2003 – 31 அக்டோபர் 2003 | |
முன்னையவர் | தாபோ உம்பெக்கி |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
4-வது மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் 5 மார்ச் 1976 – 16 சூலை 1981 | |
பிரதமர் | உசேன் ஓன் |
முன்னையவர் | உசேன் ஓன் |
பின்னவர் | மூசா இத்தாம் |
நிதி அமைச்சர் | |
பதவியில் 5 சூன் 2001 – 31 அக்டோபர் 2003 | |
முன்னையவர் | தயீம் சைனுதீன் |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பதவியில் 7 செப்டம்பர் 1998 – 7 சனவரி 1999 | |
முன்னையவர் | அன்வர் இப்ராகீம் |
பின்னவர் | தயீம் சைனுதீன் |
உட்துறை அமைச்சர் | |
பதவியில் 8 மே 1986 – 8 சனவரி 1999 | |
முன்னையவர் | மூசா இத்தாம் |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 18 சூலை 1981 – 6 மே 1986 | |
முன்னையவர் | அப்துல் தையீப் மகுமுது |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 1 சனவரி 1978 – 16 சூலை 1981 | |
பிரதமர் | உசேன் ஓன் |
முன்னையவர் | அம்சா அபு சமா |
பின்னவர் | அகமது இசுமாயில் |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 5 செப்டம்பர் 1974 – 31 திசம்பர் 1977 | |
பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் உசேன் ஓன் |
முன்னையவர் | மொகமது யாக்கோபு |
பின்னவர் | மூசா இத்தாம் |
நாடாளுமன்ற உறுப்பினர் for லங்காவி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மே 2018 | |
முன்னையவர் | நவாவி அகமது |
பெரும்பான்மை | 8,893 (2018) |
நாடாளுமன்ற உறுப்பினர் for குபாங் பாசு | |
பதவியில் 24 ஆகத்து 1974 – 21 மார்ச் 2004 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | மோகுத் பகாரும் |
கடாரம் தொகுதிக்கான மேலவை உறுப்பினர் | |
பதவியில் 30 திசம்பர் 1972 – 23 ஆகத்து 1974 | |
நாடாளுமன்ற உறுப்பினர் for கோட்டா சேத்தார் செலாட்டன் | |
பதவியில் 25 ஏப்ரல் 1964 – 10 மே 1969 | |
பெரும்பான்மை | 4,210 (1964) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மகாதீர் பின் முகமது 10 சூலை 1925 (1925-07-10) (அகவை 98) அலோர் ஸ்டார், மலேசியா |
அரசியல் கட்சி | மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி-பாக்காத்தான் ஹரப்பான் (2016–இன்று) அம்னோ-தேசிய முன்னணி (1946–2016) |
துணைவர் | சித்தி அசுமா |
பிள்ளைகள் | 7 |
முன்னாள் கல்லூரி | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இணையத்தளம் | இணையதளம் |
இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.[8] மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.[9].
கடாரம், அலோர் ஸ்டார் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அம்னோ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுடன் ஏற்பட்ட சர்ச்சை[10] காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் உசேன் ஓன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத் தெரிவானார்.
1 ஆகஸ்ட் 2023 அன்று, மகாதீர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.[11][12][13]