முதல் துருக்கியக் ககானரசு
From Wikipedia, the free encyclopedia
முதல் துருக்கியக் ககானரசு[11] (First Turkic Khaganate) என்பது கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவான அசீனா இனத்தவர்களால் நிறுவப்பட்ட ஒரு துருக்கியக் கானரசு ஆகும். இது நடுக்கால உள் ஆசியாவில் பூமின் ககான் மற்றும் அவரது சகோதரர் இசுதமியின் தலைமைத்துவத்தின் கீழ் நிறுவப்பட்டது. மங்கோலியப் பீடபூமியில் ஆதிக்கம் வாய்ந்த சக்தியான உரூரன் ககானரசுக்குப் பிறகு முதல் துருக்கியக் ககானரசு வந்தது. இந்த அரசு நடு ஆசியாவில் தனது பகுதிகளை வேகமாக விரிவாக்கியது. கண்டங்களில் பரவி இருந்த முதல் நடு ஆசியப் பேரரசாக இது திகழ்ந்தது. மஞ்சூரியா முதல் கருங்கடல் வரை பரவியிருந்தது.[5]:49[12]
முதல் துருக்கியக் ககானரசு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
552–603 | |||||||||||||
அசீனா பழங்குடியினத்தின் முத்திரை.[2]
| |||||||||||||
நிலை | கானரசு (நாடோடிப் பேரரசு) | ||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||
சமயம் | தெங்கிரி மதம் | ||||||||||||
மக்கள் | துருக் துர்க் | ||||||||||||
ககான் | |||||||||||||
• 552 | பூமின் ககான் (முதல்) | ||||||||||||
• 599–603 | தர்து (கடைசி) | ||||||||||||
யப்கு | |||||||||||||
• 552–575 | இசுதமி (முதல்) | ||||||||||||
• 575–599 | தர்து (கடைசி) | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய பாரம்பரியம் | ||||||||||||
542 | |||||||||||||
• தொடக்கம் | 552 | ||||||||||||
• கோக் துருக்கிய உள்நாட்டுப் போர் | 581 | ||||||||||||
• குறுகிய காலத்திற்கு மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது | 603 | ||||||||||||
• மேற்கு மற்றும் கிழக்கு துருக்கியக் ககானரசுகளாகப் பிரிகிறது | 603 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
557[9][10] | 6,000,000 km2 (2,300,000 sq mi) | ||||||||||||
|
கோக் துருக்கியர்கள் பழைய துருக்கிய மொழியைப் பேசிய போதிலும், ககானரசின் ஆரம்பகால அலுவல் ரீதியான நூல்கள் மற்றும் நாணயங்கள் சோக்திய மொழியைப் பயன்படுத்தின.[6][13] அரசியல் ரீதியாகத் துருக்கியர் என்ற பெயரைப் பயன்படுத்திய முதல் துருக்கிய அரசு இது தான்.[14] பழைய துருக்கிய எழுத்துமுறை 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது.[15][16]