சரவாக் கம்யூனிச கிளர்ச்சி
மலேசியாவில் நடைபெற்ற ஒரு கம்யூனிச கிளர்ச்சி / From Wikipedia, the free encyclopedia
சரவாக் கம்யூனிச கிளர்ச்சி (ஆங்கிலம்: Communist Insurgency in Sarawak (MA63); மலாய்: Pemberontakan Komunis di Sarawak; சீனம்: 砂拉越共產黨叛亂) என்பது 1962--ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் நடைபெற்ற ஒரு கிளர்ச்சி ஆகும். இந்தக் கிளர்ச்சி இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கும் (North Kalimantan Communist Party) மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கும் (Malaysian Government) இடையே நடந்தது.
சரவாக் கம்யூனிச கிளர்ச்சி Communist insurgency in Sarawak Pemberontakan Komunis di Sarawak |
|||||||
---|---|---|---|---|---|---|---|
மலேசிய ஒப்பந்தம், இந்தோனேசியா - மலேசியா மோதல், மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) பனிப்போர் பகுதி |
|||||||
கம்யூனிச கெரில்லாக்களுடனான ஒத்துழைப்பைத் தடுக்கவும்; இந்தோனேசிய ஊடுருவல்காரர்களிடம் இருந்து பாதுகாக்கவும்; சீனர் கிராமவாசிகளுக்கு ஆயுதம் ஏந்திய வீரர்களின் பாதுகாப்பு. (1965) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கம்யூனிச எதிர்ப்பு படைகள்: ஐக்கிய இராச்சியம்[5]
ஆதரவு: இந்தோனேசியா (1965-க்கு பின்னர்)[1] | கம்யூனிசப் படைகள்: வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி[6] இந்தோனேசியா (1962–65) (இராணுவ உதவி)[1]
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வால்டர் வாக்கர் (1962–1965) துங்கு அப்துல் ரகுமான் அப்துல் ரசாக் உசேன் உசேன் ஓன் மகாதீர் பின் முகமது இசுடீபன் காலோங் நிங்கான் (1963–1966) தாவி சிலி (1966–1970) அப்துல் இரகுமான் யாக்கோப்பு (1970–1981) அப்துல் தாயிப்பு முகமது (1981–1990) Brigadier ஒசுமான் இபுராகிம் பிரிகேடியர் உங்கு நசருதின் சுகார்த்தோ (from 1965) | போங் கீ சோக் யாங் சு சுங் வென் மிங் சியுவான் யாப் சூன் ஆவ் லாம் வா குவாய் அங் சு டிங் வோங் லியெங் குய் சியுங் ஆ வா |
||||||
பலம் | |||||||
1,500+ ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் வீரர்கள்[10][11]
10,000 (1968) | 600–1,000+ guerilla fighters[10][13]
|
||||||
இழப்புகள் | |||||||
99 பேர் கொல்லப்பட்டனர் 144 பேர் காயமடைந்தனர் ≈2,000 இந்தோனேசிய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்[7](கணிப்புகள்) | ----
நூற்றுக்கணக்கான இந்தோனேசிய ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர் |
||||||
≈19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[10][14] | |||||||
Statistics source:[15] |
பனிப்போர் (Cold War) காலத்தில் முன்னாள் பிரித்தானிய மலேசியாவிற்குச் (British Colony of Malaysia) சவால் விடுத்த இரண்டு கம்யூனிச கிளர்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஏற்கனவே 1948–இல் இருந்து 1960 வரை மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency) போது ஒரு கம்யூனிச கிளர்ச்சி நடைபெற்று உள்ளது.
சரவாக்கின் கம்யூனிசக் கிளர்ச்சியில், பெரும்பாலும் சீனர்கள். சரவாக் கம்யூனிச கிளர்ச்சியாளர்களாகச் (Sarawak Communist Insurgents) செயல்பட்டனர். இவர்கள் சரவாக் மீதான பிரித்தானிய சரவாக் முடியாட்சியை எதிர்த்தனர்; பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட மலேசியா கூட்டமைப்புடன் சரவாக் மாநிலத்தை இணைப்பதையும் எதிர்த்தனர். அத்துடன் 18-அம்ச உடன்படிக்கையை முற்றாக நிராகரித்தனர்.[2]